ஆவி டாக்கீஸ் சார்பில் சென்ற வருடம் (2014) அக்டோபரில் அறிவித்திருந்த வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை எனும் குறும்பட-சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும். போட்டிக்கு வந்திருந்த அனைத்து கதைகளையும் படித்து, பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தேர்வுக்குழு
"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
மற்றும் உங்கள் "ஆவி"
இந்த சிறுகதைப் போட்டிக்கு எந்த பிரிவில் (Genre) வேண்டுமானாலும் சிறுகதை அனுப்பலாம் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்திருந்த வெவ்வேறான கதைகளில் சிறுகதை இலக்கணத்தோடும் அதே சமயம் குறும்படமாகக் கூடிய வகையிலும் இருந்த கதைகளை நடுவர்கள் தேர்வு செய்தனர்.
இந்த போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தோம். அதில் ஒரு சின்ன திருத்தம். வெற்றி பெற்ற கதைகளை இறங்கு வரிசையில் (Descending) இரண்டு நாட்களுக்கு ஒரு கதை வீதம் வெளியிடப்படும். ஏப்ரல் 14 அன்று முதல் பரிசு பெறும் சிறுகதை வெளியிடப்படும். முன்பே அறிவித்ததைப் போல முதல் பரிசு பெறும் சிறுகதை குறும்படமாக எடுக்கப் படும். போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற இரண்டாம் சிறுகதை இன்று மாலை வெளியிடப்படும். காத்திருங்கள்..!
************
முடிவை அறிவிக்க தனிப் பதிவா இல்லாம அது வெளியாகிற வரிசையை வைத்தே தெரிஞ்சுக்க வெக்கறது நல்ல யுக்தி. வெளிவரப் போகின்ற கதைகளைப் படிக்க ஆவலுடன் காத்திருப்பு.
ReplyDeleteஇன்று தான் இந்த தளம் தெரியும் ஜி... தளத்தை .com என்று மாற்றுங்கள் + தமிழ்மணம் இணைக்கவும்...
ReplyDeleteமுதலில் வாழ்த்துகள்! ஆவி! சூப்பர்! நல்ல முயற்சி! உது போன்று அறிவிப்பதற்கு.
ReplyDeleteஇதோ அடுத்த கதைக்குப் "பயணம்"! அட! இது கூட ஆவியின் தளம்!!
ஆவி கண்ணுக்கு தெரியாது ஆவியின் தளம்கூடவா?. தனபாலன் கண்ணில் படாமல் போனது ஆச்சர்யமே
ReplyDeleteவெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்