Friday, August 28, 2015

தனி ஒருவன் - Movie Review

                        பேட்மேன் படங்களை பார்த்ததுண்டா? கதாநாயகன் பேட்மேன் கடைசிவரை தன் எதிரி ஜோக்கரை கொல்ல மாட்டார். அதே போல ஜோக்கரும் பேட்மேனை தோற்கடிப்பாரே தவிர அவரைக் கொல்ல மாட்டார். ஒருவருக்கொருவர் தத்தமது  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி மற்றவரை வெல்ல நினைப்பர். கதாநாயகனும், வில்லனும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என நிரூபிப்பர்.  கிட்டத்தட்ட அதுபோன்றதொரு கதைக்களம் தான் இந்த தனி ஒருவன்.

சிறப்பு: 
                         அரவிந்த் சாமியின் நடிப்பை மணிரத்னம் படங்களில் பார்த்து ரசித்ததுண்டு. அதில் அவர் நடிப்பைத் தாண்டி மணிரத்னத்தின் இயக்கம் வெளிப்படுவதையும் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இதில் மனிதர் சித்தார்த் அபிமன்யு என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இடைவேளைக்கு இருபது நிமிடங்கள் முன்னாடி தான் திரையில் தோன்றியபோதும் படம் முடிந்த பின்னும் நினைக்கும்படியான க்ளாஸ் ஆக்டிங். ஹேட்ஸ் ஆப் சார்!!

                            ஜெயம் ரவி தன் நடிப்புத் திறமையை அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார் என்றே சொல்லலாம். இதுபோன்ற கதை தேர்வுகள் நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.


கதை:
                 நேர்மையான போலிஸ், அதே நேரத்தில் தனக்கான எதிரியை தேர்வு செய்து கொண்டு அவரை சிறைப்பிடிக்க முயலும் ஒரு காவல் அதிகாரி ரவி,  அவருடைய சவாலுக்கு பதிலாய் ரவியை வைத்தே தன் காரியங்களை நகர்த்தும் புத்திசாலி வில்லன் அரவிந்த் சாமி, இவர்களுக்கிடையேயான ஆடு-புலி ஆட்டம் தான் தனி ஒருவன். இடையே கொஞ்சம் புல்லுக்கட்டாய் கதாநாயகி நயன்தாராவின் காதல் எபிசோட்.

 ஆவி Review:      
                     
                         முதலில் படத்தின் இயக்குனர் இராஜாவுக்கு பாராட்டுகள். விறுவிறுப்பான திரைக்கதையும் வலுவான கதையும், அத்தோடு  நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற சுபாவின் வசனங்களும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்தே பார்க்க வைக்கிறது. குறிப்பாய் "எல்லோருக்கும் நல்லது செய்ய இறைவனாலேயே முடியாது, அப்புறம் தானே நாமெல்லாம்" எனும் போது அரங்கில் க்ளாப்ஸ் பறக்கிறது.

                         தம்பி ராமையா "டம்மி" அப்பாவாக வலுவான  கதாபாத்திரத்தில் வந்து நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறார். அவரை தமிழ்நாட்டின் பிரம்மானந்தம் என்று சொன்னாலும் தகும். கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், அபிநயா, நாசர், முக்தா கோட்சே என அனைவரும் பலே பலே பலே. நயன்தாரா கொஞ்சம் முதிர்காதலியாய் தோன்றினாலும் அந்த தமிழ்நாட்டு உடையில் திரையில் தோன்றும் போது மனம் கொள்ளை கொள்கிறார்.

                          GPS கம் ரெக்கார்டர்  கருவியை வைத்தது தெரியாமல் தன் திட்டங்கள் வெளியே கசியும் போது ரவியின் நடிப்பு பிரமாதம் என்றால் தன் தந்தையிடம் பழத்தை உரித்துக் கொடுத்து குட்டிக் கதை சொல்லுமிடத்தில் அரவிந்த் சாமி சூப்பர் ஆக்டராய் ஜொலிக்கிறார். ஜெயம் ரவி அண்ட் டீம் செய்யும் முதல் பாதி ஆக்க்ஷன் காட்சிகள் அருமை.


செம்ம சீன்:

                           ஜெயம் ரவி சூழ்நிலையால் கட்டுண்டு நயன்தாராவிடம் கடிந்து கொள்வதும் பின் தன் காதலை உணர்த்துமிடமும், வாஆஆஆவ்!

மைனஸ் :

                             படத்தின் இறுதியில் வரும் "கண்ணால" பாடல் விறுவிறுவென போகும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். தவிர இன்னும் சற்று அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளரால் படத்தை ஒருபடி உயர்த்தியிருக்க முடியும். "தனியொருவன் தீம் சாங்" தவிர இசை சுவையாய் இல்லை.                                ஆங்காங்கே லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளால் மோகன் ராஜா எனும் தனியொருவன் சேர்த்த டீம் சிறப்பாய் வேலை செய்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறது.     

6 comments:

 1. கடைசில குடுத்துருக்கற ‘டோன்ட் மிஸ் இட்’ லேபிள் சூப்பர். ஜிபிஎஸ் ரெகார்டர் கருவியை வைக்கிற சமாச்சாரம் ஒரு தென்கொரியப் படத்தில் பார்த்த நினைவு. போகட்டும்... துவக்கம் முதல் இறுதி வரை பரபரவென்று கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பதற்காக மன்னிச்சுடலாம். சுபாவின் சுறுசுறு வசனங்களைப் பாராட்டினது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. என் நண்பர்களிடம் இதை நிச்சயம் கன்வே செய்கிறேன்.

  ReplyDelete
 2. கண்டிப்பா சொல்லுங்க சார்! அப்படியே படத்தையும் பார்த்துடுங்க

  ReplyDelete
 3. கண்டிப்பா பார்க்கனும்னு நினைக்கிறன். தியட்டரில்....

  ReplyDelete
  Replies
  1. வாத்தி, நல்ல படம், கண்டிப்பா பாருங்க ..!

   Delete
 4. எதிர்ப்போரே இல்லை போல... திக்கெட்டும் புகழ் மழை!

  ReplyDelete
  Replies
  1. செங்கோவிக்கு புடிக்கல சார்

   Delete