இன்ட்ரோ
வடிவேலு, விவேக் ஆகியோர் விட்டுச் சென்ற இடத்தை பேய்களை வைத்து நிரப்பி அதற்கு ஹாரர் காமெடி என்ற பெயரும் கொடுத்து சமீப காலமாக தமிழ் சினிமா உலகம் வசூலை அள்ளிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஹாரர் படங்கள் வருவதேயில்லை என்ற குறையைத் தீர்க்க வந்திருக்கிறது என கொஞ்சம் மிடுக்கோடு சொல்லிக் கொள்ளலாம்.!
கதை
'ஈவில் டெட்' காலம் தொட்டு வந்த அதே கதை தான். ஊரே நுழைய பயப்படும் ஒரு மர்ம வீட்டிற்குள் விளையாட்டாக நுழையும் வாலிபர்கள் கதி என்ன என்பது தான். இதில் கொஞ்சம் டெக்னாலஜி, துளியூண்டு லாஜிக் சேர்த்து பரிமாறியிருக்கிறார்கள்.
ஆக்க்ஷன்
தான் நடிக்கும் கதைகளை தேர்வு செய்வதில் எப்போதும் பாஸ் மார்க் வாங்கிவிடும் அருள்நிதி இதிலும் டிஸ்டிங்க்ஷன். நடனம், சோகம் போன்றவை இன்னும் மெருகேற வேண்டுமென்றாலும் இந்தப் படம் நிச்சயம் இவருடைய கேரியரில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு படம் இது. நண்பர்களாய் வரும் மற்ற நடிகர்களும் நல்ல தேர்வு ப்ளஸ் நல்ல நடிப்பு. டிமாண்டியாக வருபவர் இரண்டாம் பாதியில் அசத்துகிறார். எம்.எஸ்.பாஸ்கர் சிறிய வேடமென்றாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்.
இசை- இயக்கம்
ஏ.ஆர். முருகதாசின் கீழ் பணிபுரிந்த அனுபவம் கைகொடுத்திருக்கிறது இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு. முதல் படம் என்பது எந்த ஒரு காட்சியிலும் தெரிவதில்லை. கதாநாயகியோ, குத்துப்பாட்டோ இல்லாமல் ஒரு 'தமிழ்ப் படம்' எடுத்ததற்காகவே இவருக்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. இடையிடையே சிறிது தொய்விருந்தாலும் பார்வையாளனை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார்.
கேபா ஜெரமியா, த்ரில்லர் படத்துக்கான உணர்வை இசையில் கொடுக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு மற்றும் புவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங்கும் படத்துக்கு பெரிய ப்ளஸ்.
மைனஸ் ?
படத்தில் ஹீரோயினே தேவையில்லை என்று முடிவெடுத்து விட்ட பிறகு அந்த 'ஜில்லு' கதாப்பாத்திரத்தையும் இயக்குனர் தவிர்த்திருந்தால் ஒரு க்ளீன் ஹாரர் த்ரில்லராக இருந்திருக்கும்..!
ரைட்டு...
ReplyDeleteஆவி இந்த template choice வேண்டாமே...
இப்போதைக்கு தான் இது.. விரைவில் மாற்றி விடுகிறேன்.
DeleteBGM is scored by Chinna not Jeramiya
ReplyDeleteதிருத்திக் கொள்கிறேன். நன்றி.
Delete