Tuesday, September 8, 2015

பாயும் புலி - திரை விமர்சனம்

"பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு" என்று வடிவேலு சொல்வாரே. அதுபோல வலுவற்ற கதையின் மேல் பின்னப்பட்ட திரைக்கதை என்பதால் பெரும்பாலான இடங்களில் ஆட்டம் காண்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள் பிரமாதம் என்ற போதும் காஜல் அறிமுகத்திற்கு பின் தொய்வடைந்து புலி பூனை வேகத்தில் நகர ஆரம்பிக்கிறது.
கதை:

                 'அண்டர் கவர்' போலிஸ் வீட்டிற்கு தெரியாமல் ஏரியா தாதாக்களை தயவுதாட்சண்யமின்றி சம்ஹாரம் செய்துவிட்டு தன் நிழலான உறவே முக்கிய குற்றவாளியென தெரிந்த பின் அவரிடம் 'மனசாட்சியே' இல்லாமல் பல பேரைக் கொன்றுவிட்டதாய் சொல்லி அவரையும் காலி செய்யும் ஒரு "நேர்மையான" போலிஸ் அதிகாரியின்  கதை.

 ஆவி Review:      
                   
                         சுசீந்திரன்- விஷால்- இமான் என பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம். கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரோமேன்ஸ், நிறைய ஆக்சன் என்ற அதே பார்ஃமுலாவை எடுத்துக் கொண்டது தவறில்லை. அதே போல அப்பா, அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு குழந்தை, வீட்டிற்கு தெரியாமல் பழிவாங்குதல் என பல 'அதே'க்கள் நம்மை சலிப்படைய வைக்கிறது.

                         விஷால் இதுபோன்ற டெம்ப்ளேட் படங்களில் நடிப்பதை தவிர்க்கலாம், நடிப்பில் குறை எதுவும் இல்லையென்றாலும் படத்தேர்வு மிக முக்கியம். காஜல் என்ற கதாநாயகிக்காக திரையரங்கம் வரும் ரசிகர்கள் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இத்தனை படங்களில் நடித்த பின்னும் அம்மணிக்கு "ஷ" னாவும் வரல. "ரா" னாவும் வரல. சூரி வழக்கம் போல் மொக்கை காமெடிகள். பள்ளிக்கூட சிறுவனுக்கு பயப்ப்படுமிடத்தில் கொஞ்சம் தேவலாம்.

                         சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம். கசங்காத கதர் சட்டையாய் வந்து போகிறார். ஏற்கனவே மாஸ் படத்தில் வில்லனாக பார்த்துவிட்டதால் இதில் வில்லன் என்ற ட்விஸ்ட் வீணாகிப் போகிறது. மேலும் ஆர்.கே எனும் நடிகனை வெறுமென உலவ விட்டிருப்பது கொடுமை. வேழ. ராமமூர்த்தி சுமாரான நடிப்பு. பாண்டியநாடு படத்தின் பலம் நிச்சயம் பாரதிராஜா. இதில் அதே போன்ற கதாப்பாத்திரம் என்றாலும் ஏனோ மனதில் தங்க மறுக்கிறார்.

                       
மைனஸ் :

                            கிளைமாக்ஸ் காட்சி இசை  மற்றும் பாடல்கள் சுமார். இமான் யுவனுடன் கூட்டணி சேருவார் போலத் தெரிகிறது. ஏகப்பட்ட திருப்பங்கள் இருந்தும் எதுவும் ரசிக்கும்படி அமையவில்லை. ஒளிப்பதிவு சுமார்.                             மறைந்து தாக்கும் ஹீரோவுக்கும் பாயும்புலி டைட்டிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.  மொத்தத்தில் இது ரசிகர்களை நோக்கி பாயும் புலி.

1 comment: